பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குதிரைவால்’ படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் பா.ரஞ்சித், தனது நீலம் புரொக்ஷன் நிறுவனம் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. ஏற்கனவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.

அந்த வகையில் புதிதாக ‘குதிரை வால்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டீல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர்களான மனோஜ் லியோனஸ் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

ராஜேஷ் கதை எழுதியுள்ள இப்படம் வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மார்ச் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

