மிரட்டலான லுக்கில் சிம்பு.. ‘பத்து தல’ முக்கிய அப்டேட்

pathu thala

‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் மிரட்டலான லுக்கில் சிம்பு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தை ‘சில்லுன்னு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். சிம்புடன் இணைந்து இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

pathu thala

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரும், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. 

pathu thala

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐதரபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் மிரட்டலான மூன்று பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் மிரட்டலான லுக்கில் சிம்பு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  

Share this story