திரைப்படமாக உருவாகியுள்ள ‘பொள்ளாச்சி’ பாலியல் சம்பவம்.. படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியீடு !

POLLACHI TAMIL MOVIE TRAILER

பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் ‘பொள்ளாச்சி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவம் பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு கொடூர சம்பவம். 

POLLACHI TAMIL MOVIE TRAILER

இந்த சம்பவம் நடந்தபோது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தில் சில முக்கிய அரசியல் புள்ளிகளின் வாரிசுகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. தற்போது இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பொள்ளாச்சி’. முழுக்க முழுக்க புதுமுகங்கள் மட்டுமே நடித்துள்ள இப்படத்தை புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து வருகிறார். 

இந்த படத்தில் கஞ்சா கருப்பு மற்றும் வையாபுரி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து பாடல் ஒன்றிற்கு நடனமும் ஆடியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்.செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தயாரிப்பாளர் நேசம் முரளி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

 

Share this story