விரைவில் ஒளிப்பரப்பாகும் ‘பொன்னியின் செல்வன்’... எந்த டிவியில் தெரியுமா ?

ponniyin selvan

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வெளியாகியுள்ள  திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 

ponniyin selvan

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.  இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

இப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 


 

Share this story