‘பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் எப்போது ?... புதிய அப்டேட் !

ps 1

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’  வரலாற்று காவியம் தற்போது பிரம்மாண்ட திரைப்படமான உருவாகியுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ps 1

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியானது. சோழர்களின் வீர வரலாற்றை பறைசாற்றும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

ps 1

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த ‘பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Share this story