‘பொன்னி நதி’ பாடல் உருவானது எப்படி ?.. மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு !
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடல் உருவானது எப்படி என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னத்தில் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. லைக்கா தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் படம் வெளியாகும் இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘பொன்னி நதி’ பாடல் வெளியிடப்பட்டது. வாந்தியதேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்ற மேக்கிங் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சோழ நாட்டிற்கு வரும் வந்தியதேவன், பயணம்தான் இந்த பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பது அந்த வீடியோ உள்ளது.