சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பொன்னியின் செல்வன்’... எப்போது தெரியுமா ?

வரும் பொங்கல் அன்று ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சன் டிவியில் ஒளிப்பரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் படமாக உருவாகி வெளியானது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.
இரு பாகங்களாக உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.