பிரம்மாண்டமாக வெளியாகும் ‘பொன்னியின் செல்வன்’... படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக அறிவிப்பு !
மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் கனவுபடமாக உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறது.

இந்த படத்தை வரும் சம்மரில் வெளியிட மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த படம் வரலாற்று படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என லைக்கா அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


