விஜய் சேதுபதி - பொன்ராம் கூட்டணியில் புதிய படம்... முக்கிய அறிவிப்பு !

vjs 46

விஜய் சேதுபதி மற்றும் பொன் ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படுகிறது. 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எம்ஜிஆர் மகன், சீமராஜா ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் 46வது படத்தை இயக்குகிறார் பொன்ராம். போலீஸ் கதைக்களம் கொண்ட இப்படத்தில் வாஸ்கோடகாமா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

vjs 46

இந்த மிஸ் இந்தியா அழகி அனு க்ரீத்தி கதாநாயகியாக நடிக்கிறார். 23 வயதேயாகும் இவர் பிரபல விளம்பர மாடலாக இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் தலைப்பு இன்று மாலை 7.40-க்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'டிஎஸ்பி' என்று  தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story