ஹீரோவாகும் பிரபல யூடியூப்பர் மைக்செட் ஸ்ரீராம்... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

mike aet sriram

 பிரபல யூடியூப்பர் மைக் செட் ஸ்ரீராம் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

சமீபகாலமாக யூடியூப் மூலம் பிரபலமாகும் நபர்கள் சினிமாவிற்கு எளிதில் நுழைந்து விடுகின்றனர். அந்த வகையில் யூடியூப் முலம் பிரபலமானவராக இருப்பவர் மைக் செட் ஸ்ரீராம். இவரது வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். தென்னிந்தியாவில் நெம்பர் யூடியூப்பராக இருக்கும் தற்போது புதிய படம் ஒன்றின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். 

mike aet sriram

மைக் செட் ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை விவேக் இயக்கவுள்ளார். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ள '13' படத்தை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக மானசா கிருஷ்ணன் நடிக்கிறார். ஆதித்யா டிவி மூலம் பிரபலமான கதிர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏஜே இசையமைப்பாளராக பணியாற்றவுள்ள இப்படத்திற்கு மூவேந்தர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

mike aet sriram

இந்நிலையில் என் என் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் மைக் செட் ஸ்ரீராம், இயக்குனர் விவேக், நடிகை மானசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story