இந்தியில் ரீமேக்காகும் 'லவ் டுடே'... உரிமையை கைப்பற்றிய அஜித் பட தயாரிப்பாளர் !

love today

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 ‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. முதல்முறையாக ஹீரோவாக இந்த படத்தின் மூலம் களமிறங்கினார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக இப்படம் உருவாகி வெளியானது. காமெடி கலந்த காதலை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்தது.

love today

இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியிருந்தது வெளியாகியுள்ளத சமகால காதலை பற்றி பேசியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக வருண் தவான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story