‘தனது மகனிடம் எதையும் எதிர்பார்க்காதவர் ஹீராபென்’ - பிரதமர் தாயார் மறைவுக்கு இளையராஜா இரங்கல் !

ilayaraja
 பிரilayaraja தமர் மோடியின் தாயார் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் வயது முதிர்வு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து குஜராத் தலைநகர் காந்தி நகருக்கு சென்ற நரேந்திர மோடி, தனது தாய்க்கு இறுதி மரியாதை செய்தார். பிரதமர் மோடியின் தாயார் மறைவு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ilayaraja

இந்நிலையில் இசையமைப்பாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  நமது பாரத பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடியின் தாயார் மறைவுற்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதையும் கொடுத்ததில்லை.

 

இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார் 

Share this story