கடவுளின் குழந்தை புனித் - விருது விழாவில் உருக்கமாக பேசிய ரஜினிகாந்த் !

rajini

கடவுள் குழந்தை புனித் ராஜ்குமார் என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். 

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை புனித்திற்கு பதிலாக அவரது மனைவி அஸ்வினிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் வழங்கினர். 

rajini

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் ஆகிய சினிமாவின் ஜாம்பவான் 50 ஆண்டுகளில் செய்த சாதனையை புனித் 20 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார். அப்பு என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்ட புனித், கடவுளின் குழந்தை என்றும், சில காலம் நம்முடன் இருந்துவிட்டு தனது திறைமையை காட்டிவிட்டு மீண்டும் கடவுளிடம் சென்றுவிட்டார். 

rajini

கடைசியாக, இங்கு வந்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார். இது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

 

Share this story