ஆன்மிக படங்கள் எப்போதும் வெற்றிபெரும் - காந்தாரா குறித்து ஆர்.கே.சுரேஷ் பேட்டி

rk suresh

இந்துத்துவா படமாக நான் காந்தாரா படத்தை பார்க்கவில்லை எனவும், ஆன்மிக படங்கள் என்றைக்கும் வெற்றிபெரும் எனவும் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். 

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான உள்ள நிலப் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. வெறும் 16 கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கு மேல் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.  இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது : இந்துத்துவா படமாக நான் இதை பார்க்கவில்லை. அன்று வெளியான அம்மன் படம் முதல் இன்று வெளியான காந்தாரா வரை அனைத்தையும் ஆன்மிக படங்களாகதான் பார்க்கிறேன். நம்ம ஊரு கருப்பண்ணசாமி தான் அங்கு காந்தாரா. ஆன்மிக படங்கள் என்றைக்கும் வெற்றிபெரும். இவ்வாறு கூறினார்.  

Share this story