உருவாகிறது ‘ஆர்.ஆர்.ஆர் 2’... ராஜமெளலி கொடுத்த சூப்பர் அப்டேட் !

rajamouli

‘ஆர்.ஆர்.ஆர் ’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் ராஜமெளலி. ஏராளமான திரைப்படங்களை இயக்கிய போதிலும், 'பாகுபலி' படத்தின் மூலமே இந்தியாவே திரும்பி பார்க்கும் இயக்குனராக மாறினார். அதன்பிறகு அதன் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

rajamouli

இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தார். உலகம் முழுவதும் வெளியான இப்படம் 750 கோடிக்கு வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உருவாகும் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை இயக்குனர் ராஜமெளலி உறுதி செய்துள்ளார். 'ஆர்.ஆர்.ஆர்' 2 படத்தின் கதை எழுதும் பணியை தனது தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கியுள்ளதை ராஜமெளலி சமீபத்தில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களும் விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதினார்.  தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கும் பணிகளில் ராஜமெளலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Share this story