ராகவா லாரன்ஸின் ‘அதிகாரம்‘ படம் கைவிடப்பட்டதா ? ... வெளியானது புதிய தகவல் !

Adhigaaram
 ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருந்த ‘அதிகாரம்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக வந்த தகவல் வெளியாகியுள்ளது. 

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை கொடி, பட்டாஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'அதிகாரம்'. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை இயக்குனர் வெற்றிமாறன் அமைத்திருக்கிறார். 

Adhigaaram

இந்த படத்தை கதிரேசனின் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என  பான் இந்தியா படமான‌ உருவாக உள்ள இந்த படத்தில் முதல்முறையாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். 

Adhigaaram

இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது ‘சந்திரமுகி’ படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், விரைவில் அதிகாரம் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரை செந்தில்குமார் நயன்தாரா படத்தை இயக்கும் பணிகள் உள்ளார். அதனால் இந்த படம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என்றும், நயன்தாரா படத்தை முடித்து அதிகாரம் படத்தை துரை செந்தில்குமார் தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story