ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்... ‘ருத்ரன்’ படக்குழுவின் ஸ்பெஷல் அறிவிப்பு !

Rudhran

ராகவா பிறந்தநாளையொட்டி ‘ருத்ரன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளது. 

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 

Rudhran

இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.   இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகாத நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நாளை ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் ‘ருத்ரன்’ படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story