லைக்கா தயாரிப்பில் இரண்டு படங்களில் ரஜினி... விரைவில் அறிவிப்பு !

rajini

லைக்கா தயாரிப்பில் நடிகர் ரஜினி இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்துள்ள அவர், தற்போது ஆக்டிவாக நடித்து வருகிறார். அந்த வகையில் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

rajini

ஓய்வுபெற்ற 'ஜெயிலர்' கதாபாத்திரத்தில் ரஜினி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, ரஜினியின் 170வது படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் செயல் அதிகாரி திருக்குமரன், நடிகர் ரஜினியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இரண்டு படங்களில் ரஜினி நடிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

rajini

லைக்காவின் இரண்டு படங்களில் ரஜினி நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் 170வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்ததன. இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற‌ எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி ரஜினியின் 171-வது படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Share this story