ரஜினியுடன் இணைந்த மில்க் பியூட்டி.. ‘ஜெயிலர்’-ல் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள் !

jailer

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைவதால் ஜெயிலர் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் மெகா பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. 

jailer

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிரூத் தாறுமாறாக இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகளை விரைவாக முடிக்க நெல்சன் முடிவு செய்துள்ளார். 

jailer

இந்த படத்தில் மலையாள சினிமாவிலிருந்து மோகன்லாலும், கன்னட சினிமாவிலிருந்து சிவ ராஜ்குமார்,தெலுங்கு சினிமாவிலிருந்து சுனில் ஆகியோர் நடித்து இணைந்துள்ளார். இதுதவிர ரம்யாகிருஷ்ணன்,  யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story