சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து !

rajini

 ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ‘பீஸ்ட்’ படத்திற்கு நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

rajini

இந்த படத்தில் மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக அனிரூத் மிரட்டலாக இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

rajini

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி மற்றும் மோகன்லால் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக கடந்த 7-ஆம் தேதி ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்று இன்று ரஜினி சென்னை திரும்பியுள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் வரும்போது ரசிகர்களை சந்தித்த ரஜினி, அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொன்னார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.  

Share this story