ரஜினிக்காக ஸ்டைலான சண்டைக்காட்சி அமைத்துள்ளோம் - 'ஜெயிலர்' குறித்து மனம் திறந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் !

jailer

'ஜெயிலர்' படத்தில் பணியாற்றுவது குறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

jailer

இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் பணிபுரிவது குறித்து ஸ்டண்ட் சிவா, ரசிகர்களுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இணையத்தள ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த படத்தில் சண்டை காட்சிகள் வித்தியாசமாக இருக்கனும் என இயக்குனர் நெல்சன் என்னிடம் கேட்டார். அதன்படியே ரஜினிக்காக, மாஸாக, ஸ்டைலாக சண்டைக்காட்சிகளை எடுத்து வருகிறோம்.

jailer

இதுவரை 'ஜெயிலர்' படத்திற்காக மூன்று சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கிறோம். அது சிறப்பாக வந்துள்ளது. நான் ரஜினியின் சாரின் தீவிரமான ரசிகன். அதனால் அவர் நடப்பது, சிரிப்பது, உட்கார்வது, ஆயுதங்களை என அனைத்தையும் ரசித்து சண்டைக் காட்சியை எடுத்துள்ளேன். வித்தியாசமான கோணத்தில் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்திலும் பேசப்படும் சண்டைக்காட்சிகளாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

Share this story