ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவிற்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.

photo

மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா நேற்று இரவு காலமானார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதற்கான புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது.  நடிகரும், தந்தி டிவி மற்றும் தினமலர் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளருமான  ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே வயது மூப்பு காரணமாக  நேற்று இரவு  காலமானார். அவருக்கு வயது 95. இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்தார். அவரின் தந்தையின் இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

photo

photo

 ரங்கராஜ் பாண்டேவின் தந்தையின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பாண்டே மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, அவரின் தந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

photo

ரங்கராஜ் பாண்டே'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார் அதேபோன்று க/பெ. ரணசிங்கம் படத்திலும் கலெக்டராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story