எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராங்கி’... ரசிகர்களுடன் படம் பார்க்கும் திரிஷா !

rangi

‘ராங்கி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களுடன் நடிகை திரிஷா படம் பார்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராங்கி'. ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ’எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குனர் எம்.சரவணன் இயக்கியுள்ளார்.  இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

rangi

லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.  கடந்த ஆண்டே முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து சமீபத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

rangi

இந்நிலையில் இந்த படத்தை நாளை காலை பிரபல திரையரங்காக ரோகிணி திரையரங்கில் நாளை நடிகை திரிஷா, ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்கவுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story