ஜிவி பிரகாஷ் பாடிய ‘எங்கெங்கும் வானம்’ பாடல்.. ‘ரங்கோலி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

ஜிவி பிரகாஷ் பாடிய ‘ரங்கோலி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ரங்கோலி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்த படத்தில் ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. எங்கெங்கும் வானம் என தொடங்கும் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். வேல்முருகன் எழுதிய இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.