ரிலீசுக்கு தயாராகும் ‘ரங்கோலி’... செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

rangoli

விரைவில் வெளியாகவுள்ள ‘ரங்கோலி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரங்கோலி’. இந்த படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

rangoli

மேலும் இந்த படத்தில் ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சென்னை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story