"ரஞ்சிதமே ரஞ்சிதமே! மனச கலைக்கும் மந்திரமே" பாடல் புரோமோ வெளியீடு

Ranjithame

நடிகர் விஜய் பாடியுள்ள வாரிசு படத்தின் முதல்  பாடல் புரோமோ வெளியானது.


நடிகர் விஜயை வைத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் விஜய் ஆடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் முழு பாடல் நாளை மறுதினம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு அரபிக் குத்து பாடலுக்கு நடன  மாஸ்டராக பணியாற்றிய  ஜானி மாஸ்டர்  நடனம் அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் ,கணேஷ் வெங்கட்ராம், ஷாம் ,சங்கீதா, யோகி பாபு ,சம்யுக்தா உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடித்து வருகின்றனர். 

Share this story