‘ராஷ்மிகா’வை ஓட ஓட துறத்தும் சர்ச்சை – எத்தன தடவடா………..

photo

தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் பாடல்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்த கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.

photo

வேல்ட் கிரஷ்ஷான ராஷ்மிகா மந்தானா கன்னட சினிமா மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார்.மிஷன் மஜ்னுஎன்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், மிஷன் மஜ்னு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

photo

அதில் கலந்து கொண்ட ராஷ்மிகா, “பாலிவுட்டில் அதிகமான ரொமாண்டிக் பாடல்கள் வெளிவருகின்றன. ஆனால் தென்னிந்திய சினிமாவில் மசாலா பாடல்கள், குத்துப் பாடல்கள் மற்றும் கவர்ச்சிப் பாடல்களே அதிகம் வெளிவருகிறது. அப்படியில்லாமல் மிஷன் மஜ்னு படத்தில் எனது முதல் ஹிந்தி ரொமாண்டிக் பாடலாக உருவானதில் மகிழ்ச்சி. அதனை கேட்க ஆவலாக காத்திருக்கிறேன்என்று தெரிவித்தார். இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

photo

அதாவது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ‘தென்னிந்திய சினிமாவில் மட்டும் தான் கவர்ச்சிப் பாடல்கள் உள்ளதா? பாலிவுட் சினிமாவில் இல்லையா? என்று கொதித்தெழுந்து வருகின்றனர். மேலும் ராஷ்மிகா நேரத்திற்கு ஏற்றார்போல பேசுவதாகவும், பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை பெறுவதற்கே இதுபோன்ற கருத்துக்களை பகிர்வதாகவும் நெட்டிசங்கள் ராஷ்மிகாவை டோஸ்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன் காந்தார பட சர்ச்சையில் இவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Share this story