விஜய்யுடன் ரொமான்ஸ் செய்யும் ராஷ்மிகா.. ‘வாரிசு’ ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

varisu

‘வாரிசு’ படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரம் இந்த படத்தின் காட்சிகள் தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல்லாகிவிட்டது. 

varisu

குடும்ப பின்னணி கொண்டு உருவாகியுள்ள இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி ஆகியவை கலவையான இருக்கிறது. தனது குடும்பத்திற்காக போராடும் ஒரு இளைஞனின் போராட்டம் இந்த படம். 

varisu

இந்த படத்தில் ராஷ்மிகாவுடனான காட்சிகள் ரசிக்கும் வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய்யுடன் ராஷ்மிகா ரொமான்ஸ் செய்வது படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதோடு விஜய்யுடனான யோகிபாபுவின் காமெடி வரவேற்பை பெற்றுள்ளது.  

Share this story