வெறித்தனமாக உருவாகியுள்ள ‘யானையோடு மோதும்’ பாடல்.. ‘ரத்த சாட்சி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

RathasaatchiFirstSingle
‘ரத்த சாட்சி’ படத்திலிருந்து ‘யானையோடு மோதும்’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

பிரபல தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ சிறுகதையை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்த சாட்சி’. இந்த சிறுகதையின் உரிமையை கைப்பற்றிய ரஃபீக் இஸ்மாயில் தற்போது படத்தையும் இயக்கி முடித்துள்ளார். 

இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிடியுடன் இணைந்து மகிழ் மன்றம் தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆஹா தமிழ் ஓடிடியில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘யானையோடு மோதும்’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஜவாத் ரியாஸ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஷ்ணு இடவன் எழுதிய இப்பாடலை அரவிந்த் பாடியுள்ளார். 

Share this story