பார்ட்டி மோடில் ரெபா மோனிகா ஜான்.. வைரலாகும் புகைப்படங்கள்

பார்ட்டி மோடில் இருக்கும் புகைப்படங்களை ரெபா மோனிகா ஜான் வெளியிட்டுள்ளார்.
மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் ஜாகோபின்டெ ஸ்வாகராஜ்யம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சில மலையாளப் படங்களில் நடித்த அவர் ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிகில், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
குக் வித் கோமாளி அஸ்வின் உடன் இவர் நடித்த ஆல்பம் பாடல் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் உடன் ‘எப்ஐஆர்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் பார்ட்டி மோடில் இருக்கும் புகைப்படங்களை ரெபா மோனிகா ஜான் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகள் குவித்து வருகிறது.