கோவிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பான கருத்திற்கு நடிகை 'ஐஸ்வர்யா ராஜேஷ்'ஷை தாக்கும் மத ஆதரவாளர்கள்.

சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்’. அந்த கருத்து சமூகவலைதளத்தில் அதிகம் பரவிய நிலையில், தற்போது அவரை தாக்கிய அதிகமான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிடம் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர்” கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான்; ஆண் பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்த கடவுளும் என் கோவிளுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை; அப்படி எந்தக் கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள்… எந்தக் கடவுளும் இது பண்ணக்கூடாது, இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை; எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இதுபோன்ற கட்டுபாடுகளை ஒரு போதும் நம்புவதில்லை.” என தனது கருத்தை தெரிவித்தார்.
கூத்தாடி ஐசுஉஉ கேட்டுச்சா ..!!
— Arumugam Mudaliyar (@ArumugamMudali1) January 26, 2023
Aishwarya Rajesh @ashwaryarajesh pic.twitter.com/wto3PJgUoC
ஐஸ்வர்யாவின் இந்த கருத்திற்கு இந்து மத நம்பிக்கையாளர்கள் பலர் அவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளனர். தொரந்து சமூக வலதளத்தில் பல விவாதங்கள் நடந்து வருகிறது.
அவுத்துபோட்டு நடிக்கும் கூத்தாடிகள், கூத்துகட்டும் வேலையை மட்டும் பாருங்கள், எங்களுக்கு அட்வைஸ் கூ சொல்ல தேவை இல்லை.. pic.twitter.com/U5iH5DLxep
— john ravi (@johnravi1972) January 25, 2023
நாங்கள் காலணி அனிந்து கோவிலுக்குள் செல்வதில்லை. குளிக்காமல் கோவில் செல்வதில்லை. எங்களில் பலர் புலால் உண்ண அன்று கோவில் செல்வதில்லை. ஏனென்றால் அது நாங்கள் கடவுளுக்கு செய்யும் மரியாதை. யாரும் கட்டளையிடவில்லை. எங்கள் பெண்கள் மாதவிடாய் பொழுது கோவிலுக்கு செல்லாததும் அப்படித்தான். pic.twitter.com/WuJiaaKtRK
— KK Santhanam (@KSanthanam) January 25, 2023