பகுத்தறிவு பேசும் ’ஆக்குபாக்கு’ பாடல்... மாஸ்டர் மகேந்திரன் பிறந்தநாளையொட்டி ‘ரிப்பப்பரி‘ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

Ripupbury

 ‘ரிப்பப்பரி’ படத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் பிறந்தநாளையொட்டி ஆக்குபாக்கு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

‘மாஸ்டர்’ படத்தில் சின்ன பவானி கதாபாத்திரத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ரிப்பப்பரி’. இந்த படத்தை ஏகே இயக்கி வருகிறார். 

Ripupbury

இந்த படத்தின் கதாநாயகியாக சீரியா நடிகை காவ்யா மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏகே டால்லஸ்ட் மேன் நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரித்து வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Ripupbury

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ஆக்குபாக்கு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் மகேந்திரன் பிறந்தநாளையொட்டி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சாதி பேயை ஒழிக்கும் ஒரே ஆயுதம் பகுத்தறிவு மட்டும் தான் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது. இயக்குனர் ஏகே எழுதியுள்ள இந்த பாடலுக்கு துவாகரா தியாகராஜன் இசையமைத்துள்ளார். அக்ஷிதா மெர்லின் எழுதிய இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story