ஆக்ஷன் த்ரில்லரில் ‘ரன் பேபி ரன்’.. ஆர்ஜே பாலாஜி படத்தின் மிரட்டும் டிரெய்லர் வெளியீடு !

run baby run

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. டார்க் த்ரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

run baby run

இதையொட்டி இப்படத்தின் மிரட்டும் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கொலையில் சிக்கிக் கொள்ளும் ஆர்ஜே பாலாஜி, அதிலிருந்து எவ்வாறு மீளுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாக உள்ளது. இதை மிகவும் விறுவிறுப்பாக கொடுக்கிறார் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார். 

run baby run

இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா‌ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story