கடவுள் ஆசி இருந்தால் போதும் விஜய், அஜித்தை மீண்டும் இயக்குவேன் - எஸ்.ஜே.சூர்யா !

Vadhanthi

கடவுள் ஆசி கிடைத்தால் விஜய் மற்றும் அஜித்துடன் மீண்டும் பணியாற்றுவேன் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

கடந்த 1999-ஆம் ஆண்டு அஜித்தின் ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட்டடிக்க, நியூ, அன்பே ஆயிரே, கல்வனின் காதலி, வியாபாரி உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்தார். ஆனால் இந்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. 

Vadhanthi

இயக்குனராக தோல்வியை சந்தித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, நடிகராக களமிறங்கினார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு என அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது ‘வதந்தி’ என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். 

Vadhanthi

விரைவில் வெளியாகவுள்ள இந்த வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, கில்லர் படத்தை இயக்கவுள்ளேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார். அதேநேரம் கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்களை இயக்குவேன் என்று கூறினார். எஸ்.ஜே.சூர்யா இந்த பேச்சு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story