சாய் பல்லவியின் நடிப்பில் ‘கார்கி’... ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பு !

Gargi

சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

தென்னிந்திய மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கார்கி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 

Gargi

இந்த படத்தில் காளி வெங்கட், காலேஷ் ராமானந்த்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ப்ளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் ஃபூட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஸ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். 

Gargi

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ‘யாத்ரி’ என்று தொடங்கும் முதல் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story