கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பது கடினம்- சமந்தா

samantha

என் மீது நீங்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி, உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Samantha Raises Heat in Oo Antava OoOo Antava Item song from Pushpa

சமந்தாவின் யசோதா திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா வாடகைத்தாயாக நடித்துள்ளார். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்த அனுபவங்களை நடிகை சமந்தா பேசி உள்ளார். 

அதில் வாடகைத்தாய் குறித்த கேள்விக்கு, 'அவரவர் விருப்பப்பட்டது; எது மகிழ்ச்சியை தருதோ, அதை செய்யலாம்' என சமந்தா பதில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “சண்டைக்காட்சிகள் தனக்கு இயற்கையாக வருகிறது, ஆக்சன் காட்சிகளை விட கவர்ச்சியான காட்சிகளே கடினமானது . மேலும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. யசோதா படத்தில் எதிர்பாராத நிறைய விஷயங்களும் அடங்கி உள்ளன.


நானே இந்தப் படத்திற்கு டப் செய்ய வேண்டும் என்று முன்பே முடிவெடுத்து விட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும் போது, அதற்கான குரலும் அவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப் செய்ததில் மகிழ்ச்சிதான். என் மீது நீங்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள்” எனக் கூறினார்.

Share this story