வசூலை குவிக்கும் சமந்தாவின் ‘யசோதா’... இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

YASHODA

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யசோதா’ படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. தற்போது அவர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை  ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

yashoda

வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா, எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றங்களை தைரியத்துடன் எதிர்கொள்ளும் கர்ப்பிணி பெண்ணாக சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. 

இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 கோடியும், இரண்டாவது நாளில் 5 கோடியும் ஒட்டுமொத்தமாக இதுவரை 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அமெரிக்காவில் இந்த படம் 80 லட்சம் வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மழை காரணமாக இந்த படத்திற்கு வரவேற்பு இல்லாத நிலையில் ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் மற்ற பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story