சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் ‘ராஜாகிளி’... பொங்கலையொட்டி ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

Rajakili

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாகிளி’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராஜாகிளி’. இந்த படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக தனது மகனுடன் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை தம்பி ராமையா எழுதியுள்ளார்.

Rajakili

இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தினேஷ் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி இப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தம்பி ராமையாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story