முதியோர்களை கொல்லும் சடங்கு.. சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ டிரெய்லர் வெளியீடு !

Thalaikoothal

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தென் தமிழகத்தில் முதியோர்களை கொலை செய்யும் விநோத பழக்கம் ஒன்று உள்ளது. இது குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது ‘தலைக்கூத்தல்’. அதாவது வீட்டில் பாரமாக இருக்கும் முதியோர்களை ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் கொலை செய்கின்றனர். இந்த கொடுமையான சடங்கை சுட்டிக்காட்டும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. 

Thalaikoothal

இந்த படத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கதிர், வசுந்தரா, வையாபுரி, முருகதாஸ், கதாநந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.    

இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முதியோரை கொல்லும் இதுபோன்ற சடங்குகளை ஒழிக்க போராடும் மகனின் போராட்டம் இந்த படம். மொத்தத்தில் இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story