மிரட்ட வரும் சந்தீப் கிஷன் & விஜய் சேதுபதி.. டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு !

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘மைக்கேல்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்துள்ள நடித்துள்ள திரைப்படம் 'மைக்கேல்'. இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாகவும் மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை செளத்ரி தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Theatrical Trailer on Jan 21st😎
— Yuvraaj (@proyuvraaj) January 15, 2023
Team #Michael wraps the shoot on a high note ❤️🔥
Meet the Man who loved the hardest, In theatres this Feb 3rd 👊🏾#HappyMakarSankranti@sundeepkishan @VijaySethuOffl @Divyanshaaaaaa @jeranjit @SamCSmusic @SVCLLP @KaranCoffl @adityamusic pic.twitter.com/9Oibh7wvMb