சந்தானம் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா... இயக்குனர் யார் தெரியுமா ?

santhanam

சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு வித்தியாசமான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் 'கிக்' திரைப்படம் உருவாகியுள்ளது. கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதற்கிடையே கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் உருவான 'டிக்கிலோனா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். சந்தானம் முதல்முறையாக 3 வேடங்களில் நடித்திருந்த இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சயின்ஸ் பிக்ஷன் காமெடியில் உருவாகியிருந்த இந்த சந்தானத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

இந்நிலையில் சந்தானத்தின் புதிய படத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் டிக்கிலோனா இயக்குனர் கார்த்திக் யோகியுடன் இரண்டாவது முறையாக சந்தானம் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கவுண்டமணி - செந்தில் புகழ்பெற்ற காமெடி காட்சியாகும். 

இந்த படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் ‘ஓ பேபி’. ‘குட்டாச்சாரி’. ‘கார்த்திகேயா 2’, ‘தமாகா’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது.‌

Share this story