உருவாகிறது சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ 3 -ஆம் பாகம்.. இயக்குனர் யார் தெரியுமா ?

dhilluku dhuddu movie

இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் நடிப்பில் கடந்த 2016-ஆம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘தில்லுக்கு துட்டு’. இந்த படத்தை ‘லொள்ளு சபா’  மூலம் பிரபலமான ராம்பாலா இயக்கியிருந்தார். அஞ்சல் சிங் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

dhilluku dhuddu movie

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் ‘தில்லுக்கு துட்டு’ இரண்டாம் பாகம் உருவானது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படமும் மாபெரும் வெற்றிப்பெற்றது. 

dhilluku dhuddu movie

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் பாகத்தை ராம்பாலா இயக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ராம்பாலாவுடன் இணை இயக்குனராக இருந்த ஆனந்த இப்படத்தை இயக்கவுள்ளார். ராம்பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே சந்தானம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story