சந்தானம் படத்தின் கதாநாயகி அறிவிப்பு.. ‘கிக்’ படத்தின் முக்கிய அப்டேட்
சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘கிக்’ படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னட சினிமாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை தன்யா ஹோப். அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ஹரிஷ் கல்யாணின் ‘தாராள பிரபு’ படத்தில் நடித்தார். பின்னர் கோல்மால், குலசாமி ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘கிக்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நடிகை ராகினி திரிவேதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார்.
பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இசையில் இந்த படத்தின் பாடல்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சர்க்கல் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

