சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’... டிரெய்லரை வெளியிடும் பிரபல நடிகர் !

Santhanam

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தனக்கென தனி காமெடி ரூட்டில் சென்றுக்கொண்டிருக்கிறார் சந்தானம். அவரின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, முனீஷ்காந்த், புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Santhanam

இந்த படத்தை ‘வஞ்சகர்’ உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகியுள்ளது.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Santhanam

லாப்ரின்த் பிலிம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் ஜெயம் ரவி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Share this story