சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'இரை'.. வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள இரை வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முன்னணி நடிகரான சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘இரை’. இந்த வெப் தொடரை தூங்காவனம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜேஷ்.எம் செல்வா இயக்கவுள்ளார். இந்த வெப் தொடரை ராதிகாவின் ராடன் மீடியா வெர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த தொடரில் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களை இருக்கையின் முனையில் கட்டிப்போடும், பரபர திருப்பங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடருக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக யுவராஜ் பணியாற்ற உள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கிய இந்த வெப் தொடரின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஒடிடித்தளமான ஆஹா ஒடிடித்தளத்தில் வரும் 18-ஆம் தேதி 'இரை' வெப் தொடர் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

