சர்தார், பிரின்ஸ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது!!

நடிகர் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார். இப்படத்தில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் , லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனின்பிரின்ஸ் திரைப்படமும் இன்று அதிகாலை 5 மணி முதலில் சிறப்பு காட்சிகள் மூலம் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.தீபாவளி என்றாலே புதிய திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. முன்னதாக தீபாவளி வரை மட்டும் வழக்கு வழங்கப்படும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி, இந்த முறை தீபாவளிக்கு பிறகு மூன்று நாட்களில் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.