‘சர்தார்’ படத்தின் வசூல் வேட்டை விவரம்..... உலக அளவில் இத்தனை கோடியா?

கார்த்தி

 கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

karthi

 இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி  இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. அதிரடி, த்ரில்லரில் உருவாகி வெளியான இந்த படத்தில்   ராசி கண்ணா, ராஜீஷா விஜயன், லைலா, இளவரசு, முரளி சர்மா என பலருமே முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தனர்.

akrthi

படத்தை எஸ். லக்ஷ்மன் குமார் தனது 'ப்ரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க,  ஜார்ஜ் வில்லியம்ஸ் , ரூபன்  ஆகியேற் இந்த படத்திற்கு  ஒளிபதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சிறப்பாக  செய்திருந்தனர்.

fhfh

தண்ணீரை வியாபாரமாக பார்க்காமல் , ஆதரமாக பார்க்க வேண்டும் என்பதே சர்தார் படத்தின் மையக் கரு. கடந்த மாதம் 21-ஆம் தேதி  வெளியான இந்த படம் தமிழகத்தில் முதல் வாரத்தில் 380 திரையுலும், இரண்டாவது வாரம் 500 திரைகளிலும் வெளியானது.சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இது வரை உலகம் முழுவதும் ரூ. 85 கோடியை வசூலித்து லாபம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான 11 நாட்களில் படம் இவ்வளவு வசூலித்துள்ளது, என்பது படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story