சசிகுமாரின் மாறுபட்ட நடிப்பில் ‘காரி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Kaari

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘காரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனராக சசிகுமார் நடிப்பில் ‘காரி’, ‘காமன் மேன்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காரி’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

Kaari

மேலும் இந்த படத்தில் சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Kaari

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் கிராமத்து கதைக்களத்தில் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நவம்பர் 25-ஆம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story