சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

NaanMirugamaaiMaara

 சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. 

‘கழுகு’ படத்தின் மூலம் பிரபலமான சத்ய சிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம ‘நான் மிருகமாய் மாற’. இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இவர்களுடன்  மதுசூதனன், துளசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

NaanMirugamaaiMaara  

செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.  சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

NaanMirugamaaiMaara

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

 

Share this story