திட்டமிட்டபடி வெளியாகும் சசிகுமாரின் ‘காரி’... ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

kaari

 சசிகுமாரின் ‘காரி’ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனராக சசிகுமார் நடிப்பின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காரி’. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

kaari

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

kaari

 இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் கிராமத்து கதைக்களத்தில் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியீட்டு இந்த ரிலீசை படக்குழு உறுதி செய்துள்ளது.  

Share this story